Body Heat Reduction Tips: கொளுத்தும் வெயில்.. உடல் சூட்டை தணிக்க என்ன செய்ய வேண்டும்? அசத்தல் டிப்ஸ் இதோ..!
வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க உதவும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
மே 02, சென்னை (Health Tips): கோடை வெயிலின் (Summer Health Tips) தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது. இதனால், உடல் சூடு அதிகரித்து, உடலுக்கு தேவையான ஆற்றல் குறைகிறது. உடலுக்கு தேவையான அளவு நீரேற்றம் இருக்க வேண்டும். உடல் சூடு இருந்தால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. உடல் சூட்டினால் மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், கண் சிவப்பாகுதல் எனப் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். உடல் சூட்டை (Body Heat) குறைக்க என்னென்ன வழிகள்முறைகள் உள்ளன என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம். Health Tips: உங்களுக்கு இந்த அறிகுறியெல்லாம் இருக்குதா? மக்களே உஷார்.!
- முதலில் உடலின் வெப்பநிலையை தணிக்க தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். குறைந்தது ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. குழந்தைகளுக்கு அவரவரின் வயதுக்கு ஏற்ப 1 அல்லது ஒன்றரை லிட்டர் அளவு தண்ணீர் கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் போது, ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றி, அதில் கால், பாதம் நனையும்படி 15 நிமிடங்கள் வைத்திருந்தாலும், வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது.
- தினமும் 2 டம்ளர் நீர்மோரை காலை 11 மணி மற்றும் மாலை 4 மணியளவில் குடித்து வந்தால், உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும். 2 கரண்டி வெந்தயத்தை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த வெந்தயம், தண்ணீரையும் சேர்த்துக் குடிக்கலாம்.
- தாதுக்கள், வைட்டமின் நிறைந்த இளநீரைக் குடித்துவர, வெப்பநிலை குறையும். மேலும், புதினா டீ போட்டுக் குடிப்பது. புதினா, எலுமிச்சை சாறு கலந்து ஜூஸ் போட்டு குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.
- வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல் சூட்டை தணிக்க வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, கிர்ணி, முலாம் பழம் ஆகியவற்றை சாப்பிட்டால் உடலைக் குளிர்ச்சியாக்கும். மாதுளை ஜூஸ் மற்றும் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு நீங்கும்.
- நீர்ச்சத்து நிறைந்துள்ள புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ, முள்ளங்கி, கேரட் ஆகியவை உடலுக்குக் குளிர்ச்சி தரும். இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சப்ஜா விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அதை பழச்சாறுகளில் அல்லது அப்படியே வெறுமனே குடிக்கலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.
- உடலின் வெப்பம், வெளி காரணங்களால் ஏற்படும் சூடு ஆகியவற்றைப் போக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். கற்றாழையை சுத்தப்படுத்தி, அதன் சதைப் பகுதியை நன்கு கழுவ வேண்டும். பனை வெல்லம் கலந்து அரைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாகும்.
குறிப்பு: மேல் குறிப்பிட்ட தகவல்களை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
Tags
Today News
Live News Tamil
Today News in Tamil
News Today
News
Live News
இன்றைய செய்திகள்
Health Tips
Health Wealth
Health Tips Tamil
ஆரோக்கியம்
உடல்நலம்
ஹெல்த் டிப்ஸ்
ஹெல்த் டிப்ஸ் தமிழ்
ஆரோக்கிய குறிப்புகள்
Body Heat Reduce Tips
Body Heat Reduce
Reduce Body Heat
Body Heat Reduce Tips Tamil
Body Heat
Summer Heat
உடல் சூடு
கோடை வெயில்
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Chettinad Kaalan Thokku: செட்டிநாடு ஸ்டைலில் ருசியான காளான் தொக்கு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!
இன்றைய வானிலை: டிட்வா புயல் எதிரொலி.. தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை.. மக்களே கவனம்.!
Health Warning: குழந்தைகளுக்கு இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்: ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்து.!
Advertisement
Advertisement
Advertisement