Health Tips: உங்களுக்கு இந்த அறிகுறியெல்லாம் இருக்குதா? மக்களே உஷார்.!

அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள மாரடைப்பின் அறிகுறிகள் குறித்து இன்று விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். இதுபோன்ற ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் படியுங்கள்.

Health Tips: உங்களுக்கு இந்த அறிகுறியெல்லாம் இருக்குதா? மக்களே உஷார்.!
Heart Attack (Photo Credit: Pixabay)

மே 03, சென்னை (Health News in Tamil): இன்றளவில் வெகுவாக அதிகரித்து வரும் மாரடைப்பு மரணங்கள் பலரையும் பீதியில் ஆழ்த்துகிறது. இடதுபக்கம் நெஞ்சு லேசாக வாழ்கிறது என்றாலே பலருக்கும் மாரடைப்பு பயம் என்பது அதிகரிக்கிறது. லேசான வலியுடன் பயக்கும் கூடவே தொற்றிக்கொண்டாள் பயம் கூடுதல் வலியை தருகிறது. இடப்பக்க நெஞ்சு பாரத்துடன், இறுக்கமாக, கனமாக இருந்தால் அந்த விஷயத்துக்கு பல காரணங்கள் உண்டு. இதயம், நுரைநீரால், தசை பிரச்சனை, ஜீரணக்கோளாறு, மனநல பிரச்சனை, விலா எலும்பு பிரச்சனை, ஆஸ்துமா, நிமோனியா போன்ற காரணத்தாலும் நெஞ்சு வலி லேசாக இருக்கும்.

இத அறிகுறியெல்லாம் கவனியுங்க:

இதயம் சார்ந்த பிரச்சனையாக இருந்தால், இடப்பக்க நெஞ்சு பாரத்துடன் இருக்கும். இதனால் இடது தோள்பட்டையிலும் வலி இருக்கு. இடது கையில் விரலில் இருந்து தோள்பட்டை வரை வலி பரவும். உடலெல்லாம் அதிக வியர்வை வெளியேறும். தலைவலி ஏற்படும். வாந்தி உணர்வு இருக்கும். இதயத்துடிப்பு வெகுவாக அதிகரிக்கும். மூச்சு வாங்கி இதயத்துக்கு நேராக பின்பக்கம் முதுகில் வலி, நெஞ்சை கயிறால் கட்டுவதுபோன்ற உணர்வு போன்றவையும் மாரடைப்பு அறிகுறிகள் ஆகும். இவை இருந்தால் மருத்துவமனை செல்வது நல்லது. Mango Rasam Recipe: கமகம சமையல்.. சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.! 

நிதானம் வேண்டும்:

இவ்வகை அறிகுறிகளை வாயுக்கோளாறாக இருக்கலாம் என அலட்சிப்படுத்தி வீட்டிலேயே இருக்க வேண்டாம். மருத்துவமனைக்கு சென்று உரிய சோதனை செய்வது நல்லது. அதேபோல, அதிக காரம், கொழுப்பு, மசாலா நிறைந்த உணவுகளையும் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். இதனால் இவ்வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். இதய பிரச்சனைக்கு முதல் மருந்து மன தைரியம் என்பதால் எக்காரணம் கொண்டும் பதற்றம் கூடாது. நிதானத்துடன் செயல்பட வேண்டும். ஒருவேளை இவ்வகை அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெறலாம்.

(The above story first appeared on LatestLY on May 02, 2025 08:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).