Arudra Darisanam 2025: நடராஜர் அருளை தரும் ஆருத்ரா தரிசனம்.. வரலாறு, தேதி மற்றும் மகா அபிஷேகம் குறித்த தகவல் இதோ..!
நடராஜரை வழிபட உகந்த நாளான ஆருத்ரா தரிசனம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
ஜனவரி 08, சென்னை (Festival News): தமிழ் மொழியில் திருவாதிரை நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் எல்லா சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனம் (Arudra Darisanam) சிறப்பாக நடைபெறும். திருவாதிரை விரதம், ஆருத்ரா தரிசனம் அல்லது திருவாதிரை என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்து பண்டிகையின் ஒரு பகுதியாகும். இவ்விழா தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா தரிசனமானது சிவபெருமானின் நடராஜரை கொண்டாடுகிறது. Thiruvadhirai 2025: நடராஜர், சிவனுக்கு உகந்த திருவாதிரை.. அன்றைய நாளின் அபிஷேகமும் அதன் பலன்களும்.. முழு விபரம் இதோ.!
ஆருத்ரா தரிசனம்:
சிவபெருமானுக்கு (Lord Shiva) நடத்தப்படும் மிக உயர்வான 6 வகை அபிஷேகங்களில் ஒன்றுதான் இந்த ஆருத்ரா தரிசனம். ஆருத்ரா என்பது சமஸ்கிருத சொல்லாகும். தமிழில் திருவாதிரை (Thiruvathirai 2025) என்று பொருள். மார்கழி மாததில் வரும் திருவாதிரை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம் கனகசபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை ஆகியவை போற்றப்படுகிறது. அப்படி நடராஜரை (Lord Nataraja) வழிபட உகந்த தினம்தான் இந்த ஆருத்ரா தரிசனம் ஆகும். சிவபெருமான் பல இடங்களில் லிங்க வடிவில் தான் காட்சி கொடுப்பார். ஆனால், அவர் நடராஜர் ரூபத்தில் காட்சி கொடுக்கும் ஸ்தலங்கள் மிகக் குறைவுதான். இந்த நடனத்தால்தான் ஒட்டுமொத்த அண்டமும் படைக்கப்பட்டது என நம்பப்படுகிறது. பொதுவாக, நடராஜர் அனைத்து நாட்களிலும் சந்தன காப்பு சாத்தப்பட்டு காட்சியளிப்பார். ஆனால், இந்த ஆருத்ரா தரிசனத்தின் போது காப்பு கலைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தரிசனம் அளிக்கிறார்.
ஆருத்ரா தரிசனம் வரலாறு:
பதஞ்சலி முனிவரும், வியாக்கர பாத முனிவரும் சிவபெருமானின் பக்தர்களாவர். இவர்கள் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண அவரை நோக்கி வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி, சிவபெருமானும் தில்லையிலேயே தாண்டவம் ஆடினார் என கூறப்படுகிறது. சிவபெருமான் ஆடிய அந்த நாள்தான், மார்கழி திருவாதிரை நட்சத்திரமும், மார்கழி பௌர்ணமி திதியும் ஆகும். அதனால்தான் மார்கழி ஆருத்ரா தரிசனம் (Margazhi Arudhra Darisanam) சிறப்பு வாய்ந்ததாகும். Margazhi Pournami 2025: மங்களம் தரும் மார்கழி பெளர்ணமியும், புண்ணியம் தரும் கிரிவலமும்.. முழு விவரம் உள்ளே..!
ஆருத்ரா தரிசனம் நாள்:
இந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் (Arudhra Darisanam Date and Time), மார்கழி மாதம் டிசம்பர் - ஜனவரி திருவாதிரை நட்சத்திரத்தில், ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிதம்பரத்தில் 10 நாள் திருவிழா ஜனவரி 04ஆம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 13ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று, ஆருத்ரா தரிசனம் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி முதல் மகா அபிஷேகம் நடைபெறும். மறுநாள், ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய் கிழமை) இரவு முத்து பல்லக்குடன் நிறைவு பெரும்.
மகா அபிஷேகம்:
ஆருத்ரா தரிசனம், ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை நடராஜருக்கு திருநீர், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்றவற்றால் மகா அபிஷேகம் நடைபெறும். மகா அபிஷேகம் சுமார் 4 மணிநேரம் நடைபெற உள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)