Gold Rate Today: உயரத் தொடங்கும் தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Rate Today in Chennai: சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரு.40 உயர்ந்துள்ளது. (Gold Price Today Chennai) இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (Gold Silver Rate Today in Chennai) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

Gold Silver Price (Photo Credit : @Team LatestLY)

நவம்பர் 03, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடிக்கும் போர், பங்குச்சந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள், தங்கம்-வெள்ளியின் தினசரி உற்பத்தி மற்றும் விற்பனை எதிர்பார்ப்பு நிலவரம் உட்பட பல்வேறு காரணிகள் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கம்-வெள்ளியின் விலை (Gold Silver Rate Today) நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கம், வெள்ளி விலை என்பது கணிசமான தொகை குறைந்து இருந்தது. ஆனால், தங்கமும், வெள்ளியும் போட்டிபோட்டு உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.30,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.25,000 என்ற மதிப்பில் இருந்து தற்போது ரூ.1,80,000 என்ற விலை உச்சத்தை சந்தித்துள்ளது. Coimbatore News: கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. கோவையில் பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..! 

தங்கம்-வெள்ளி விலை (Gold Silver Rate):

உலகளாவிய பங்குசந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே வேளையில், மற்ற நாடுகளைவிட சீனா அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவிக்கிறது. இதனால் தங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் தினசரி உற்பத்தியை தாண்டி இருப்பதால், தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. மேலும், வெள்ளி பொருட்களை மின்சார பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார் என மின்சாதன பொருட்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் வெள்ளியின் தேவையும் அதிகரித்து வருகின்றன. Bus Truck Accident: ஜல்லியோடு ஜல்லியாக புதைந்த பயணிகள்.. பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 16 பேர் பலி..! https://tamil.latestly.com/india/telangana-tragedy-16-dead-after-bus-and-truck-collide-head-on-in-vikarabad-bus-truck-horrific-accident-at-telangana-highway-crash-video-goes-viral-27906.html

தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் தங்கம் ரூ.90,800 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.40 உயர்ந்து ரூ.11,350 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1,68,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிரடியாக உயர்ந்து குறைந்து வந்த தங்கம், வெள்ளி விலை மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கி இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement