Gangrape (Photo Credit : Pixabay)

நவம்பர் 03, கோயம்புத்தூர் (Coimbatore News Today): கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவி (Coimbatore College Student), நேற்று (நவ.02) இரவு தனது காதலருடன் வெளியே சென்றுள்ளார். இவர்கள் இருவரும் இரவு சுமார் 11 மணியளவில் கோயம்புத்தூர் விமான நிலையம் (Coimbatore Airport News) பின்புறம் உள்ள பகுதியில் காரில் இருந்தபடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு 3 பேர் கும்பல் வந்ததாக தெரியவருகிறது. ஜோடி தனியாக இருப்பதை அறிந்த கும்பல் மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி, பெண்ணை தூக்கி சென்றுள்ளது. Trichy: காப்புக்காட்டில் பெண் எரித்துக்கொலை.. திருச்சியை நடுங்கவைத்த பயங்கரம்.. நண்பனுக்காக நடந்த கொடூரத்தின் அதிர்ச்சி பின்னணி.!

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை (College Girl Student Gang Abused in Coimbatore):

தனிமையான பகுதியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், பின் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதனிடையே, காயமடைந்த இளைஞர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நேரில் வந்த இளைஞர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், காயமடைந்த நபரும் சிகிச்சையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விசயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில் 3 பேர் கும்பலுக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவர் கும்பலுக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் துயரம்:

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோல, வரதட்சணை கொடுமை தொடர்பான மரணங்களும் கோவை, திருப்பூர் மாவட்ட மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய மாநகராக இருக்கும் கோவையில் நடக்கும் துயரங்கள் அதிர்ச்சிதரும் வகையில் இருக்கிறது.