7-Year-OId Girl Dies of Rabies: 7 வயது சிறுமி ரேபிஸ் தொற்றால் மரணம்; கலங்கவைக்கும் சோகம்.!
சிறுமியை நாய் கடிதத்தில் ரேபிஸ் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறுதியில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
மே 05, கொல்லம் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம், பத்தினம்புரா பகுதியில் வசித்து வரும் சிறுமி நியா பாசல் (வயது 7). சிறுமியை கடந்த ஏப்ரல் மாதம் தெருநாய் ஒன்று கடித்தது. கடந்த ஏப்ரல் 8 அன்று சிறுமி நாய்க்கடி அடைந்த பின்னர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டார். பின் சிறுமி அவ்வப்போது சிறுசிறு உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களாகவே சிறுமிக்கு காய்ச்சல் உட்பட தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுக்கழிவறையில் தங்கையை பலாத்காரம் செய்த சகோதரன்; வயிற்று வலியால் அம்பலமான உண்மை.!
சிகிச்சை கிடைத்தும் நேர்ந்த சோகம்:
சிறுமிக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பின்னரும் தீவிர ரேபிஸ் தொற்று காரணமாக மரணம் நேர்ந்துள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விஷயம் குடும்பத்தினர் & அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்திள்ளது. வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்த சிறுமியை நாய் சிறுமியின் தாய் கண்முன் முகம், கைகளில் கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சமீபத்தில் மட்டும் கேரளாவில் நாய்க்கடி காரணமாக 3 சிறுமிகள் வரை பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.