முன்விரோதத்தில் கொடுமை.. 16 வயது மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்.. அதிர்ச்சி காட்சிகள் லீக்.!

8 பேர் கும்பலாக சேர்ந்து 16 வயது சிறுவனை தாக்கிய கொடுமை நடந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியானதைத்தொடர்ந்து 8 பேருக்கு எதிராக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

16-Year-Old Naked and Beaten by Gang in Bhopal (Photo Credit: @/p981gy3JG2hiccj X)

ஏப்ரல் 19, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மாவட்டம், கெளதம் நகர் காவல் எல்லைக்குட்பட்ட சேட்டக் பாலம் பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவர் 8 பேர் கும்பலால் தாக்கப்பட்டார். ஷாரதா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், 8 பேர் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த விஷயம் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி நடைபெற்ற நிலையில், இதன் வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி உள்ளூரில் வைரலாகியது. JEE Mains Result Link: ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.. லிங்க் உள்ளே.! 

சிறுவன் மீது தாக்குதல்:

வீடியோ குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 8 பேர் கும்பலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், 16 வயது சிறுவன் அர்பான்ஸ் ஷேக், ஷானு கஃடா உட்பட 8 பேர் கும்பலால் முன்விரோதம் காரணமான பிரச்சனையில் தாக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது 8 பேர் கும்பலுக்கும் அதிகாரிகள் வலைவீசியுள்ளனர்.

நிர்வாணப்படுத்தி தாக்கிய காட்சிகள்:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement