Operation Sindoor: எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. மாஸ் காட்டும் இந்தியா.. பாகிஸ்தான் தாக்குதல் வானிலேயே முறியடிப்பு.!
எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியாவும் ராணுவ தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
மே 09, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இதன் முதல் அங்கமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் நிலைகள் குறிவைத்து தாக்கி அழிக்கப்பட்டது. பயங்கரவாதத்தை அப்பட்டமாக ஊக்குவித்து வரும் பாகிஸ்தான், பயங்கரவாதிகள் தங்கள் நாட்டின் குடிமக்கள் போன்ற எண்ணத்தில் இந்தியாவுக்கு எதிரான கண்டனங்களை குவித்தது. பொதுமக்களுக்கு சேதம் இன்றி பயங்கரவாதிகளை மட்டும் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்திய விஷயத்துக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என கூவியது. Operation Sindoor: எல்லை தாண்டி ஊடுருவ முயற்சி; பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை..!
இந்தியா - பாகிஸ்தான் சண்டை தீவிரம் (India Pakistan War):
இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தி 30 க்கும் மேற்பட்ட அப்பாவி இந்தியர்களை பாகிஸ்தான் இராணுவம் கொன்றது. இதனால் இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக நேரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தான் இராணுவம் எடுக்கும் அதே ஆயுதத்தை எடுத்து பாகிஸ்தானிய ராணுவத்தினரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல் பாகிஸ்தான் இந்தியாவில் எப்படியேனும் தாக்குதல் நடத்த வேண்டும் என டிரோன், ஏவுகணை அனுப்பி இருக்கிறது. போர் விமானம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.
டிரோன் தாக்குதல்:
ஆனால், தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக அனைத்தையும் அழித்த இந்தியா இருதரப்பு சண்டையில் திறம்பட செயல்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று லாகூரில் மதியம் வரை அடையாளம் தெரிய டிரோன் தாக்குதல் திடீரென ஆங்கங்கே நடந்தது. இதனால் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பும் கடுமையான சேதத்தை எதிர்கொண்டது. நேற்று இரவு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்ட்ட நிலையில் அவை அனைத்தும் இந்திய ராணுவத்தால் தவிர்க்கப்பட்டது. மொத்தமாக சுமார் 50 டிரோன்களை இந்தியா அழித்துள்ளதாக
காஷ்மீரில் டிரோன் தாக்குதல்: