Operation Sindoor: எல்லை தாண்டி ஊடுருவ முயற்சி; பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் பஞ்சாபில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மே 08, பெரோஸ்பூர் (Punjab News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இச்சம்பத்துக்கு பதிலடி தரும் வகையில், இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அளிக்கப்பட்டு, 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. Operation Sindoor: பஞ்சாப்பில் ஏவுகணை வீசி தாக்குதல்.. எல்லையில் அதிகரிக்கும் போர் பதற்றம்.., பாகிஸ்தான் அத்துமீறல்..!
எல்லை தாண்டிய பாகிஸ்தான் நபர் சுட்டுக்கொலை:
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (மே 08) ஏவுகணையை (Missile Attack) வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. லாகூரில் இன்று காலை ட்ரோன்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், அப்பகுதியில் பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே, பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள எல்லைப் பகுதியில், இரவு நேரத்தில் இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தானை சேர்ந்த அந்த நபர் ஊடுருவ முயன்றார். அப்போது, பாதுகாப்பு படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதனைத்தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
வீடியோ இதோ:
#WATCH | Border Security Force (BSF) neutralises a Pakistani intruder in Punjab's Ferozepur sector
Dr Manpreet Singh, Emergency Medical Officer, Ferozepur govt Hospital, says, "The body of an unknown person has been brought here by police." pic.twitter.com/v40cFYHLc8
— ANI (@ANI) May 8, 2025
(The above story first appeared on LatestLY on May 08, 2025 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

