UPI Transactions GST: ரூ.2,000 யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு? நிதியமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

குறைந்தபட்சம் ரூ.2000 க்கு மேல் யுபிஐ முறையில் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும் என வெளியான தகவலுக்கு நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

UPI Transactions (Photo Credit: @viralposts2323 / @CNBCTV18Live X)

ஏப்ரல் 19, புதுடெல்லி (New Delhi): மத்திய நிதி அமைச்சகம் சார்பில் பல்வேறு விஷயங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு, நேரடியாக மத்திய அரசு ஒவ்வொரு பொருளுக்குமான வரிகளை வசூலித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விஷயத்தில் இன்று வரை தமிழ்நாடு அரசு - மத்திய அரசு இடையே கருத்து முரண் நீடித்து வருகிறது. இதனிடையே, ரூ.2,000 க்கு மேல் யுபிஐ முறையில் பரிவர்த்தனை செய்யப்படும் தொகைக்கு ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகியது. JEE Mains Result Link: ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.. லிங்க் உள்ளே.! 

வரி குறித்த திட்டம் இல்லை:

இந்த விசயத்துக்கு மத்திய அரசு நேரடி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி விதிக்கும் முறைகள் குறித்து மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை. இந்த விஷயம் குறித்து பகிரப்படும் தகவலில் உண்மை இல்லை. அதனை நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement