Viral Video: பைக்கில் குடும்பத்துடன் சென்றவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நேருக்கு நேர் வந்த காட்டு யானை.. தப்பித்து ஓடிய வீடியோ உள்ளே.!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திருநெல்லிக்கு அருகில் உள்ள அப்பப்பாரா அருகே காட்டு யானையிடம் இருந்து 3 பேர் கொண்ட குடும்பம் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video (Photo Credit: @TimesofIndia X)

ஜனவரி 20, வயநாடு (Kerala News): கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் திருநெல்லிக்கு அருகில் உள்ள அப்பப்பாரா (Appappara) அருகே யானைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டு வருகிறது. இரவு நேரங்கள் மட்டும் அல்லாமல் பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் உலா வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் 3 பேர் கொண்ட குடும்பத்தினர் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையின் வளைவில் திடீரென காட்டு யானை நேருக்கு நேர் வந்துள்ளது. அவர்களை கண்டதும் துரத்தவும் ஆரம்பிக்கிறது. ஆனால் பைக் ஓட்டுநரின் சாதுரியத்தால் அவர்கள் விரைவாக வளைந்து யானையிடம் இருந்து தப்பிக்கின்றனர். பின்பு காட்டு யானை மெதுவாக நடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Kolkata Doctor Rape & Murder Case: பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு; குற்றவாளிக்கு "ஆயுள் தண்டனை" - நீதிமன்றம் தீர்ப்பு..!

ஆக்ரோஷமாக துரத்தி சென்ற காட்டு யானை:

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement