ஜனவரி 20, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் (Kolkata) உள்ள ஆர்.ஜி.கர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 09ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை (Rape And Murder) செய்யப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இந்த வழக்கில், காவல்துறையில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை சிபிஐ கைது செய்தனர். Rowdy Murder: முன்பகை காரணமாக ரவுடிக்கு அரிவாள் வெட்டு; 6 பேர் கும்பல் வெறிச்செயல்..!
நாடுதழுவிய போராட்டம்:
இதனிடையே பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவ மாணவிக்கு நீதிகேட்டு, அகில இந்திய அளவில் மருத்துவ சங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் போரட்டம் நடத்தினர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் பணியாற்றி வந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நீதிமன்றம் தீர்ப்பு:
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் (ஜனவரி 18) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. விசாரணை நடைபெற்று 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில், சீல்டாவின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அனிர்பன் தாஸ் தலைமையில் நீதிமன்றம் மூடிய கதவு அமர்வில் தீர்ப்பை வழங்கியது. சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை (Life Imprisonment) விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின்போது, தன்னை பேசவே விடவில்லை என்றும், பல ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு தான் கட்டாயப்படுத்தி துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு, ஆதாரங்களின் அடிப்படையில் தான் குற்றத்தை செய்துள்ளீர்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று நீதிபதி பதில் அளித்து தண்டனை விவரங்களை அறிவித்துள்ளார்.