வானிலை: சென்னை அருகே உள்ள ஃபெங்கல் புயல்.. பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழை.!

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Rains (Photo Credit: @ANI X)

நவம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஃபெங்கல் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஃபெங்கல் புயல் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் எனவும் இன்று உருவாகும் ஃபெங்கல் புயல் வரும் 30ஆம் தேதி சென்னைக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொள்ளும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. School College Leave: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. கனமழை எச்சரிக்கையால் உத்தரவு.!

வானிலை மையம் முக்கிய அறிவிப்பு:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement