நவம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமானது நாகையிலிருந்து 590 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 710 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 800 கி.மீ. தூரத்திலும் இது நிலைக் கொண்டுள்ளது. அது போல் இலங்கை - திரிகோணமலை அருகே 310 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தமானது மெதுவாக நகர்ந்து வருகிறது. அதாவது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. இந்நிலையில் பெங்கல் என புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கால் என்ற பெயரை சவுதி அரேபியா வைத்துள்ளது. இந்த புயல் அடுத்த 2 நாட்களில் தமிழக – இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. Tamil Nadu CM Stalin: ஃபெங்கால் புயல் எதிரொலி.. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை (School Colleges Leave Today):
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மற்றும் புதுச்சேரிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.