Tsunami Alert: திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.!
கிரீஸ் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மே 22, ஏத்தன்ஸ் (World News Tamil): ஐரோப்பாவில் உள்ள கிரீஸ் நாட்டில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகள் அளவில் பயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் வீதிகளில் தஞ்சம் புகுந்த நிலையில், தற்போது சுனாமி எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது. அங்குள்ள பிரபலமான சுற்றுலா மையமான எளன்டா பகுதியில் இருந்து 58 கிலோ மீட்டர் தொலைவில் 77 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது சுமார் 100 கிலோமீட்டர் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த வாரத்தில் தான் கிரீஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலப்பரப்பு பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. Nancy Mace: நாடாளுமன்றத்தில் நிர்வாண போட்டோ காண்பித்த பெண் எம்பி.. பரபரப்பு சம்பவம்.!
கிரீஸ் நிலநடுக்கம் :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)