Nancy Mace ( Photo Credit : @RepNancyMace X)

மே 22, அமெரிக்கா (World News): அமெரிக்காவில் குடியரசு கட்சி தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் தனது ஆட்சியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நான்சி மெஸ் தனது நிர்வாண படத்தை அவையில் காட்டி பலரையும் அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படம் தனது வருங்கால கணவராக வர இருந்தவர் தனது அனுமதி இன்றி ரகசியமாக எடுத்ததாகவும் தெரிவித்தார். இந்த விஷயம் மேற்பார்வை குழுவின் அமர்வின் போது நடந்துள்ளது. Indian-Origin Techie Killed: ஓடும் பேருந்தில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் குத்திக்கொலை.. சக இந்தியர் அதிர்ச்சி செயல்..!

மேற்பார்வை குழு அமர்வில் சட்டமன்ற உறுப்பினர் நான்சி பேசியது:

அவை கூட்டத்தில் பேசிய நான்சி, "அனுமதி இன்றி எனது வருங்கால கணவர் பேட்ரிக் பிரியண்ட் என்னை புகைப்படம் எடுத்தது அதிர்ச்சியை அளித்துள்ளது. சுதந்திரம் என்பது கோட்பாடு கிடையாது. நீங்கள் உறங்கும்போது யாரேனும் படம் எடுக்க முயற்சித்தால் அது சுதந்திரம் இல்லை. நான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மட்டுமல்லாது பெண்ணாகவும் பாதிக்கப்பட்டு பேசுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு :

இவ்வாறான பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ரகசியமாக புகைப்படம் எடுக்கப்பட்டது கிட்டத்தட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் எனவும் எம்பி நான்சி மெஸ் குற்றம் சாட்டினார். அவையில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் நான்சி பேசியது தொடர்பான வீடியோ :