Virat Kohli: ஆரவாரத்தில் அதிர்ந்த மைதானம்; கட்டுப்பாட்டை மீறிய ரசிகர்.. விராட் கோலி செய்த சம்பவம்..!

ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியை காண, ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Virat Kohli Fan Boy Moment (Photo Credit: @cricloverforu X)

ஜனவரி 31, டெல்லி (Sports News): டெல்லி மற்றும் ரயில்வே அணிகளுக்கு (Delhi Vs Railway) இடையிலான உள்ளூர் ரஞ்சி கிரிக்கெட் போட்டி (Ranji Trophy 2025) அருண்ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, 13 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக டெல்லி அணிக்காக களம் இறங்கினார். அவரை காண்பதற்காக நேற்று முதல் நாளிலேயே, டெல்லி மைதானம் பரபரப்பாகவும் உற்சாகத்தாலும் நிறைந்திருந்தது. தரவுகளின்படி, ஏறக்குறைய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகைத்தந்திருக்கலாம் என கூறப்படுகிறது. Virat Kohli: மைதானத்தில் ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டம்.. ஏமாற்றிய விராட் கோலி..!

மைதானத்தில் பரபரப்பு:

நேற்று தொடங்கிய முதல்நாள் போட்டியின்போது, ரயில்வேஸ் அணி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது, ரசிகர் ஒருவர் கட்டுப்பாடுகளை மீறி, விராட் கோலியை நெருங்கிசென்று அவரது கால்களை தொட்டார். உடனே பாதுகாப்புப் பணியாளர்கள் விரைவாகத் தலையிட்டு, அத்துமீறி நுழைந்த நபரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர். ரசிகர் மீது எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கோலி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அதன் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மைதானத்திற்குள் நுழைந்த விராட் கோலி ரசிகர்:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement