Virat Kohli: மைதானத்தில் ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டம்.. ஏமாற்றிய விராட் கோலி..!

ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட்கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு சங்வான் பந்தில் 'க்ளீன் பவுல்டு' ஆனார்.

Virat Kohli: மைதானத்தில் ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டம்.. ஏமாற்றிய விராட் கோலி..!
Virat Kohli Ranji Trophy 2025 (Photo Credit: @Sheikhhumza49 X)

ஜனவரி 31, டெல்லி (Sports News): டெல்லி மற்றும் ரயில்வே அணிகளுக்கு (Delhi Vs Railway) இடையிலான உள்ளூர் ரஞ்சி கிரிக்கெட் போட்டி (Ranji Trophy 2025) அருண்ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட்கோலி, 13 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக டெல்லி அணிக்காக களம் இறங்கினார். அவரை காண்பதற்காக நேற்று முதல் நாளிலேயே, டெல்லி மைதானம் பரபரப்பாகவும் உற்சாகத்தாலும் நிறைந்திருந்தது. தரவுகளின்படி, ஏறக்குறைய 15000 ரசிகர்கள் வருகைத்தந்திருக்கலாம் என கூறப்படுகிறது. Ranji Trophy 2024-25: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை.. ஷர்துல் தாக்கூர் அபாரம்..!

மைதானத்தில் பரபரப்பு:

நேற்றைய முதல்நாள் போட்டியின்போது, ரயில்வேஸ் அணி 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்துக்கொண்டிருக்கும்போதே, ரசிகர் ஒருவர் கட்டுப்பாடுகளை மீறி, விராட்கோலியை நெருங்கிசென்று அவரது கால்களை தொட்டார். உடனே பாதுகாப்புப் பணியாளர்கள் விரைவாகத் தலையிட்டு, அத்துமீறி நுழைந்த நபரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர். ரசிகர் மீது எந்தவித கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கோஹ்லி அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ரசிகர்களை ஏமாற்றிய கோலி:

இந்நிலையில், 2வது நாளான இன்று, பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட விராட்கோலி, ரயில்வேஸ் அணிக்கு எதிரான இன்னிங்ஸின் முதல் பவுண்டரியை அடித்த சிறிது நேரத்திலேயே, ஹிமான்ஷு சங்வானின் இன்ஸ்விங் பந்துவீச்சில் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்துக்கும் பரபரப்பாக இருந்த மைதானம், அடுத்த நொடியே எந்தவித சலசலப்பும் இல்லாமல் அமைதியானது.

ஆர்ப்பரித்த ரசிகர் கூட்டம்:

விராட் கோலி ஏமாற்றம்:

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 12:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).