IND Vs AUS 1st Test: பெர்த் டெஸ்ட் முதல் நாளில் இந்தியா அபார பந்துவீச்சு.. ஆஸ்திரேலியா அணி தடுமாற்றம்..!
பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்துள்ளது.
நவம்பர் 22, பெர்த் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16-வது பார்டர் கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy 2024) தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு (AUS Vs IND 1st Test, Day 1) சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று (நவம்பர் 22) முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியது. இப்போட்டி, இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு ஆரம்பமானது. இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. IND Vs AUS 1st Test: 150 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் அபாரம்..!
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) 41 ரன்களும், ரிஷப் பண்ட் ((Rishabh Pant) 37 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில், ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) 4, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறியது. இந்தியாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 27 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்தது. அலெக்ஸ் ஹரி 19, மிட்செல் ஸ்டார்க் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா (Jasprit Bumrah) 4, சிராஜ் 2, ஹர்ஷித் ராணா 1 விக்கெட்களை வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 83 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)