நவம்பர் 22, பெர்த் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16-வது பார்டர் கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy 2024) தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு (AUS Vs IND 1st Test, Day 1) சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று (நவம்பர் 22) முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியது. இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு ஆரம்பமானது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். AUSW Vs INDW: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஷபாலி வர்மா அதிரடி நீக்கம் - இந்திய மகளிர் அணி அறிவிப்பு..!
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணியில் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவருமே டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து வந்த கோலி 5 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றினார். சற்று நிதானமாக விளையாடிய கே எல் ராகுல் 74 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட்களை இழந்து 51 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
இந்நிலையில், ரிஷப் பண்ட் (Rishabh Pant) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் சற்று விரைவாக ரன்களை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியில் இந்திய அணி 49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா அணி தரப்பில், ஜோஷ் ஹேசில்வுட் (Josh Hazlewood) 4, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) 41 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும் அடித்தனர்.
ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு:
Who will win this match?
— Sunita Pal (@SunitaPal1992) November 22, 2024