Heinrich Klaasen Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஹென்ரிச் கிளாசென் திடீர் ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்..!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஜூன் 02, பிரிட்டோரியா (Sports News): தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் (Heinrich Klaasen), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதாகும் அவர், தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானர். PBKS Vs MI: மும்பைக்கு முட்டுக்கட்டைபோட்ட மழை? ரசிகர்கள் ஏமாற்றம்.!
கிளாசன் ஓய்வு:
இதுவரை 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.69 சராசரியுடன் 2141 ரன்கள் எடுத்துள்ளார். 58 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1,000 ரன்கள் எடுத்தார். மேலும், 4 டெஸ்ட் போட்டிகளில் 104 ரன்கள் அடித்துள்ளார். தற்போது, தென்னாப்பிரிக்க அணியின் அனுபவம் வாய்ந்த வீரரான இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும், ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.