
ஜூன் 01, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று 73வது ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த குவாலிபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (Punjab Kings Vs Mumbai Indians IPL 2025) மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியே ஐபிஎல் 2025 இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதும் என்பதால், இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் (MI Vs PBKS IPL 2025):
அகமதாபாத் மைதானத்தை பொறுத்தவரையில் மும்பை அணிக்கு தோல்வியை தர வாய்ப்புள்ள களம் ஆகும். அதே நேரத்தில், பஞ்சாப் அணி அங்கு நடந்த போட்டியில் தோற்றது இல்லை. இதனால் களரீதியாக பஞ்சாப் அணியின் கைகள் ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிளே ஆப் வாய்ப்புகளை மும்பை அணி எப்போதும் தவறவிட்டதில்லை. பெரும்பாலான பிளே ஆப்பில் எப்படியாவது வெற்றிபெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும். GT Vs MI Eliminator: மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி.. குஜராத் போராடி தோல்வி..!
இயற்கை வைத்த ஆப்பு (Ahmedabad Weather):
இந்நிலையில், அகமதாபாத் (Ahmedabad Rains Today) பகுதியில் இன்று மிதமான மழை / லேசான மழைக்கு வாய்ப்புகள் இருக்கலாம் என கணிக்கப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்புகள் மிகக்குறைவு என கணிக்கப்பட்ட நிலையில், டாஸ் முடிந்த பின்னர் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஆட்டம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரவு 09:30 வரை காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டம் தடைபட்டால் (What Happened Match Abounded Due to Rain IPL 2025):
ஒருவேளை மழை தொடர்ந்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கு இறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு வழங்கப்படும். மும்பை அணி இந்த போட்டியை எப்படியாவது வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஆகையால், இன்றைய போட்டி மழை நின்றது நடத்தப்படுமா? அல்லது கைவிடப்பட்டு பஞ்சாப் அணி முன்னேறி செல்லுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மணிக்கு பின்னர் மழை தொடர்ந்தால் ஓவர்களில் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வரும். சூப்பர் ஓவர் போல ஒரு ஓவர் போட்டியும் நடக்கலாம். எந்த விஷயத்துக்கும் வழியில்லாத பட்சத்திலேயே பஞ்சாப் அணி வெற்றி அடைந்ததாக கருதப்படும்.
மழை தொடருவதால் ஆட்டம் தள்ளிப்போவதாக அறிவிப்பு:
It has started to rain again in Ahmedabad 🌧️
We will be back shortly with further updates.#TATAIPL | #PBKSvMI | #Qualifier2 | #TheLastMile https://t.co/dJ15ov7NsU
— IndianPremierLeague (@IPL) June 1, 2025