CSK Vs RR: இறுதி நேரத்தில் மாஸ் சம்பவம் செய்த தோனி.. நேரடியாக ஸ்டெம்பில் ஒரே அடி.. போனது விக்கெட்.!

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களத்தில் களமிறங்கியுள்ளது. ஆட்டத்தின் இறுதியில் வெற்றி யாருக்கு என்பது தெரியவரும்.

IPL CSK Vs RR 27-04-2023 Match (Photo Credit: Twitter)

ஏப்ரல் 27, ராஜஸ்தான் (Cricket News): டாடா ஐ.பி.எல் 2023 (TATA IPL 2023) போட்டித்தொடரில் 37வது போட்டி இன்று ராஜஸ்தான் (Rajasthan Royals) மாநிலத்தில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர்கிங்ஸ் (RR Vs CSK) அணியும் மோதுகின்றன.

போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியினர் பேட்டிங் தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய வீரர்களில் யாஷஸ்வி 43 பந்துகளில் 77 ரன்களை குவித்து அணியின் இலக்கை உயர்த்த பேருதவி செய்தார். ஜூரில் 15 பந்துகளில் 34 ரன்னும், படிக்கல் 13 பந்துகளில் 27 ரன்னும் அடித்திருந்தனர். Mark Antony மிரட்டும் எஸ்.ஜே சூர்யாவின் வில்லன் கதாபாத்திரம்; விஷால் – எஸ்.ஜே சூர்யாவின் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் உள்ளே.!

ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களை எடுத்துள்ளது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் சென்னை அணியின் சார்பில் விளையாடிய தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 42 ரன்கள் வழங்கி 2 விக்கெட் எடுத்திருந்தார். மகேஷ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

ஆட்டத்தின் முடிவில் 19.4 வது ஓவரின் போது தோணி தனது பழைய ஸ்டைலில் நேரடியாக ஜுரேலை ரன் அவுட் செய்தார். இதுதான் இன்றைய ஆட்டத்தில் ரசிகர்களின் உச்சகட்ட கவனத்தை பெற்ற விஷயமாக இருக்கிறது.

Direct Hit

Made in Heaven

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement