Renuka Singh Takes Shafali Verma Wicket: முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய ஷபலி வர்மா; பந்துவீச்சில் அசத்திய ரேணுகா சிங்.!
ஓப்பனிங் பேட்டராக களமிறங்கிய ஷபலி வர்மாவை, முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரேணுகா சிங் வீழ்த்தி வந்த வேகத்தில் அனுப்பி வைத்தார். கிரிக்கெட் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.
பிப்ரவரி 17, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) போட்டியில், நான்காவது ஆட்டம் 17 பிப்ரவரி 2025 இன்று, இரவு 07:30 மணிக்கு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் (RCB Vs DC WPL 2025) அணிகள் இடையே நடைபெறுகிறது. போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio HotStar) செயலி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தமிழ் மொழியிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (Star Sports 1) தொலைக்காட்சியில், நேரலையை தமிழில் காணலாம். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பவுலிங் தேர்வு செய்தது. இதனால் டெல்லி அணி களமிறங்கியது. ஓப்பனிங்கில் கேப்டன் மேக் & ஷபலி களமிறங்கினர். மேக் முதல் பந்தில் ஒரு ரன்கள் சேகரித்தார். DC Vs RCB Women's WPL 2025: டாஸ் வென்று பெங்களுர் அணி பந்துவீச்சு தேர்வு; களைகட்டும் பெண்கள் பிரீமியர் லீக்.!
ரேணுகா சிங் அசத்தல் பந்துவீச்சு:
பின் முதல் ஓவரில் இரண்டாவது பந்தில் ரேணுகா சிங் வீசிய பந்தில் ஷபலி வர்மா விக்கெட்டை இழந்து வெளியேறினார். முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அனுப்பிய ரேணுகா சிங் கடந்த 2 சீசனில் 44 ஓவரில் மொத்தமாக 3 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றி இருந்தார். ஆனால், 3 வது பெண்கள் பிரீமியர் லீக் சீசனில் தான் வீசிய 5 ஓவரில் 5 விக்கெட்டை கைப்பற்றி அசதி இருக்கிறார். இதனால் அவர் நல்ல பார்மில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 29 வயதாகும் ரேணுகா சிங் டி20 போட்டியில் 5 விக்கெட் எடுத்த ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த 2024ம் ஆண்டில் மொத்தம் 36 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
ரேணுகா விக்கெட் எடுத்த வீடியோ:
பெண்கள் பிரீமியர் லீக் 3 வது சீசனில் 3 ஓவரில் 5 விக்கெட் எடுத்து அசத்திய ரேணுகா சிங் தாகூர் (RENUKA SINGH THAKUR):