பிப்ரவரி 17, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) போட்டியில், நான்காவது ஆட்டம் 17 பிப்ரவரி 2025 இன்று, இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் (RCB Vs DC WPL 2025) அணிகள் மோதுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டம், இரண்டு அணிகளுக்கும் டபிள்யு.பி.எல் 2025 (WPL 2025) இடையே முக்கியமானதாக கருதப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் புள்ளிகளை தக்கவைக்க பெங்களூரும், புள்ளிகளை முன்னேற்ற டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. DC Vs RCB Women's WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக்: இன்று டெல்லி - பெங்களூர் அணிகள் மோதல்.. நேரலை, நேரம் குறித்த விபரம் இதோ.! 

களமிறங்கும் வீரர்கள்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் (Royal Challengers Bengaluru Playing Squad) சார்பில் ஸ்மிருதி (Smriti Mandhana) மந்தனா (கேப்டன்), டேனி வியாட்-ஹாட்ஜ், எலிஸ் பெர்ரி, ரக்வி பிஸ்ட், ரிச்சா கோஷ், கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், ஜோஷிதா வி ஜே, எக்தா வி ஜே, எக்தா பிஷ்ட், ரேணுகா சிங் தாகுர் ஆகியோர் களமிறங்குகின்றனர். டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals Playing Squad) அணியின் சார்பில் மெக் லான்னிங் (சி), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அன்னாபெல் சதர்லேண்ட், மரிசேன் காப், ஜெஸ் ஜோனாசென், சாரா பிரைஸ், ஷிகா பாண்டே, ராதா யாதவ், அருண்டி ரெட்டி மற்றும் மின்னு மணி ஆகியோர் களமிறங்குகின்றனர்.

போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio HotStar) செயலி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தமிழ் மொழியிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (Star Sports 1) தொலைக்காட்சியில்,  நேரலையை தமிழில் காணலாம்.

வெற்றி யாருக்கு? எதிர்பார்ப்பில் அணிகள்:

நிக்கி பிரசாத் Vs ரிச்சா கோஷ் (Niki Prasad Vs Richa Ghosh):

டாஸ் வென்று ஆர்சிபி அணி பவுலிங் தேர்வு:

பெங்களூர் - டெல்லி அணிகள் சார்பில் களமிறங்கும் வீரர்கள்: