SA Vs AUS Day 1: 43 ரன்னுக்கு 4 விக்கெட்களை இழந்து தென்னாப்பிரிக்கா திணறல்.. ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25, தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் அடித்துள்ளது.

SA Vs AUS Day 1 (Photo Credit: @evrydaypursuit X)

ஜூன் 11, லார்ட்ஸ் (Sports News): ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 (WTC Final 2025) இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் (SA Vs AUS, Day 1) இன்று (ஜூன் 11) மோதுகின்றன. இதில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலம் நேரலையில் (WTC Final 2025 Live Streaming) பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். SA Vs AUS Day 1: தடுமாறும் ஆஸ்திரேலியா.. மார்னஸ், ட்ராவிஸ் காலி; 23 ஓவரில் 4 விக்கெட் இழப்பு..!

தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா (South Africa Vs Australia):

அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்திலேயே கவாஜா, கிரீன் அடுத்தடுத்து ரபாடா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினர். மார்னஸ் லபுஷேன் 17 ரன்களுடன் மார்கோ யான்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ட்ராவிஸ் ஹெட் 11 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து ஜோடி சேர்ந்த ஸ்மித் - வெப்ஸ்டர் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்மித் 66 ரன்னிலும், வெப்ஸ்டர் 72 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் நாள் ஆட்டம்:

இதனையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்கரம் 0, ரியன் ரிகில்டன் 16, வியான் முல்டர் 6, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 22 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்னிலும், டேவிட் பேடிங்கம் 8 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்னும், 169 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement