
ஜூன் 11, லார்ட்ஸ் (Sports News): ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 (WTC Final 2025) இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா அணிகள் (SA Vs AUS, Day 1) இன்று (ஜூன் 11) மோதுகின்றன. இதில், டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலம் நேரலையில் (WTC Final 2025 Live Streaming) பார்க்கலாம். இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பவுமா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். SA Vs AUS WTC Final Toss Update: தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?
தென்னாப்பிரிக்கா எதிர் ஆஸ்திரேலியா (South Africa Vs Australia):
அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு உஸ்மான் கவாஜா - மார்னஸ் லபுஷேன் தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பத்திலேயே கவாஜா, கிரீன் அடுத்தடுத்து ரபாடா பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினர். சற்று நேரத்தில், மார்னஸ் லபுஷேன் 56 பந்தில் 17 ரன்களுடன் மார்கோ யான்சன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ட்ராவிஸ் ஹெட் 11 ரன்னில் நடையை கட்டினார். முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 23.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 67 ரன்கள் அடித்துள்ளது. ஸ்மித் 26 ரன்களுடன் களத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா மற்றும் யான்சன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.