வானிலை: டிச.24 முதல் கனமழை எச்சரிக்கை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டிச.24 முதல் 2 நாட்களுக்கு பரவலான மழைப்பொழிவை தமிழகத்தில் எதிர்பார்க்கலாம்.
டிசம்பர் 22, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், கரூர், விருதுங்கர், மதுரை, சிவகங்கை, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 17:30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, இன்று (22-12-2024) காலை 08:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24 - ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
இன்றைய வானிலை (Today Weather):
22-12-2024 மற்றும் 23-12-2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். Ramanthapuram News: பாம்பன் மீனவர்களிடம் சிக்கிய வாள் மீன் ரூ.56,000 க்கு விற்பனை.. மீனவர்கள் மகிழ்ச்சி.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
24-12-2024 அன்று வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25-12-2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.26 முதல் டிச.28 வரை மழை நிலவரம்:
26-12-2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, யின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27-12-2024 மற்றும் 28-12-2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை (Chennai Weather Today) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை (Chennai Weather Forecast) முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். PM Modi Kuwait Visit: "43 ஆண்டுகளுக்கு பின் குவைத் மண்ணில் இந்திய பிரதமர்" - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
22-12-2024 முதல் 24-12-2024 ஆகிய தேதிகளில் வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 25-12-2024 அன்று தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 48 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22-12-2024 மற்றும் 23-12-2024 ஆகிய தேதிகளில் ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24-12-2024 மற்றும் 25-12-2024 ஆகிய தேதிகளில் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.