வானிலை: தமிழகத்திற்கு கனமழை அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு வார்னிங்.!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tamilnadu Rains File Pic (Photo Credit : @ETVBharatTN X)

ஆகஸ்ட் 07, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதி அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளை வானிலை அறிவிப்பில் தெரிவித்திருந்தது. தமிழக அரசின் அசத்தல் திட்டம்.. டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.20,000 மானியம்.. விண்ணப்பிப்பது எப்படி?.! 

கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :

இந்நிலையில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு

  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • திருவண்ணாமலை
  • ராணிப்பேட்டை
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்

சென்னை வானிலை (Chennai Weather) :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement