Tamil Nadu Electric Vehicle Scheme For Delivery Workers (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 07, சென்னை (Chennai News): இன்றளவில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் வெகுவாக அதிகரித்துவிட்டன. வீட்டில் இருந்தபடி பொருட்களை ஆர்டர் செய்தால் பயனர்களுக்கு வீடுதேடி சென்று பொருட்களை வழங்கும் ஆன்லைன் டெலிவரி ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. இந்த நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தை காக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தை (Tamilnadu Govt Scheme) செயல்படுத்தியுள்ளது. அதன்படி உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார இரு சக்கரம் வாங்குவதற்கு தலா ரூ.20,000 மானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு முதற்கட்டமாக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. Agaram Foundation: அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?.! 

டெலிவரி ஊழியர்களின் முன்னேற்றத்திற்கான அசத்தல் திட்டம் :

இது தொடர்பான அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் படி, அமேசான், பிளிப்கார்ட், மீஷோ போன்ற ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் மின்சார இரு சக்கரம் வாங்கினால் அதற்கு ரூ.20,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு நல வாரியத்தில் பதிவு செய்த டெலிவரி ஓட்டுநர்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்து அனுமதி கிடைத்ததும் அதற்கான சலுகையை பெறலாம். இதனால் டெலிவரி ஊழியர்கள் வாழ்வாதாரம் மேம்படும். இந்த திட்டத்தில் மானியம் பெறுவது எப்படி? என்பது குறித்து இனி விரிவாக பார்க்கலாம். "120 பவுன் பத்தல" - வரதட்சணை கேட்டு டார்ச்சர்.. திருமணமான 10 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.. திருப்பூரில் தொடரும் சோகம்.!

ரூ.20,000 மானியத்திற்காக விண்ணப்பிப்பது எப்படி (How To Apply Delivery Worker Subsidy)? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?

  • தமிழ்நாடு இணையம் சார்ந்த (Gig Workers) தொழிலாளர்களின் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள ஸொமெட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy), செப்டோ (Zepto). பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon), மீஷோ (Meesho) போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.
  • தமிழ்நாடு அரசின் நல வாரிய அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் உறுப்பினராக இருத்தல் அவசியம்.
  • முதற்கட்டமாக மானிய திட்டத்தின் கீழ் 2,000 டெலிவரி ஊழியர்களுக்கு மின்சார இருசக்கரம் வாங்குவதற்காக ரூ.20,000 மானியம் வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பிக்கும் பயனர் ஒருவருக்கு தலா ரூ.20,000 வீதம் மானியம் வழங்கப்படுகிறது.
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்ட பின்னர் திட்டத்துக்கான பலன் கிடைக்கும்.
  • தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்து அறிய கூடுதல் விவரங்களுக்கு https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கவும்.