வானிலை: இன்று நாளையும் கனமழை., அக்.12 முதல் மிககனமழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!

இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 2 நாட்களுக்கு பின் 2 நாட்கள் மிககனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tomorrow weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 10, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில்‌ பொதுவாக ஒருசில இடங்களில்‌, உள்மாவட்டங்களில்‌ அநேக இடங்களிலும்‌, கடலோர மாவட்டங்களில்‌ ஒருல இடங்களிலும்‌) மழை பெய்துள்ளது. காரைக்கால்‌ பகுதியில்‌ மிக லேசான மழை பஇவாகியுள்ளது. புதுவையில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ கோவை, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவள்ளூர், திருச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், இராமநாதபுரம், தேனி, பெரம்பலூர், கடலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 35.2 டிகிரி வெப்பநிலையும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையை பொறுத்தவரையில் லட்சத்தீவு மற்றும்‌ அதனை ஒட்டிய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரபிக்‌ கடல்‌ , கர்நாடகா - கோவா கடற்கரை பகுதிகளில்‌ நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதியில்‌ 12 ஆம்‌ தேதி வாக்‌கில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி உருவாக வாய்ப்புள்ளது.

இன்றைய வானிலை (Today Weather):

10.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, மதுரை, திண்டுக்கல்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, நாமக்கல்‌, சேலம்‌, கள்ளக்குறிச்‌சி, திருவண்ணாமலை, வேலூர்‌, நீலகிரி, பெரம்பலூர்‌, ஈரோடு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Govt Employees Bonus: அப்படிப்போடு.. அரசுப் பணியாளர்களுக்கு போனஸ்; எந்த துறைக்கு எப்படி?.. முழு விபரம் உள்ளே.!

நாளைய வானிலை (Tomorrow Weather):

11.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திண்டுக்கல்‌, கரூர்‌, நாமக்கல்‌, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தேனி, விருதுநகர்‌, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.12 அன்று 12 மாவட்டங்கள் கனமழை:

12.10.2024 அன்று தமிழகத்இல்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருப்பூர்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, மதுரை மற்றும்‌ சிவகங்கை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மிககனமழை எச்சரிக்கை:

13.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, பெரம்பலூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ மாவட்டங்களில்‌, காரைக்கால்‌ பகுதியில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட மலைப்பகுதஇகள்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்‌, திருச்சராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்‌, நீலகிரி, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Minister SS Sivasankar: சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மொழிப்போர்‌ தியாகிகள்‌ இலவச பேருந்து பயணம்; அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் விளக்கம்.! 

அக்.14 அன்று கனமழைக்கான வாய்ப்புகள்:

14.10.2024: தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம்:

15.10.2024 அன்று தமிழகத்‌தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கோயம்புத்தூர்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌ , நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்‌ சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 16.10.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னை மற்றும்‌ புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்‌திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பறிலை 30-31 செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25” செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

10.10.2024 முதல்‌ 12.10.2024 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌, தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌, கேரள - கர்நாடக கடலோர பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌, மாலத்தீவு பகுதிகள்‌, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌, தென்‌கிழக்கு மற்றும்‌ தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement