Govt Employees Bonus: அப்படிப்போடு.. அரசுப் பணியாளர்களுக்கு போனஸ்; எந்த துறைக்கு எப்படி?.. முழு விபரம் உள்ளே.!

2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்கள் பலன்பெறும் வகையில், 369 கோடியே 65 லட்சம்‌ ரூபாய் மிகை ஊதியம் மாறும் கருணைத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Govt Employees Bonus: அப்படிப்போடு.. அரசுப் பணியாளர்களுக்கு போனஸ்; எந்த துறைக்கு எப்படி?.. முழு விபரம் உள்ளே.!
TN Govt Logo (Photo Credit: Wikipedia)

அக்டோபர் 10, தலைமை செயலகம் (Chennai News):  அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ 'C' மற்றும்‌ 'D' பிரிவு தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை (Bonus) வழங்கப்படும்‌ என தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவித்துள்ளார்.

ஊக்கப்படுத்தும் விதமாகவும் ஊதிய உயர்வு மற்றும் போனஸ்:

உற்பத்தித்‌ துறை, பொறியியல்‌, மருந்துகள்‌, ஆடைகள்‌, தோல்‌ பொருட்கள்‌, தொழில்நுட்பம்‌ உட்பட பல முக்கிய துறைகளிலும்‌ தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள்‌ ஒன்றாக திகழ்கிறது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உலகத்தரம்‌ வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும்‌ திறன்மிக்க தொழிலாளர்களின்‌ அயராத உச்சரிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தொழில் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு விழாக்காலங்களில் அவர்களின் வேலைக்கு பரிசளிக்கும் வகையிலும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் போன்றவற்றை அறிவித்து இன்ப அதிர்ச்சி வழங்கும்.

போனஸ் அறிவிப்பு:

அந்த வகையில், 2023-24 ஆம்‌ ஆண்டுக்கான மிகை ஊதியம்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகையை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் அரசுப் பணியாளர்களுக்கு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்‌. அதன்படி, திருத்தப்பட்ட போனஸ்‌ சட்டம்‌ 2015ன்‌ படி, மிகை ஊதியம்‌ பெறத்‌ தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிகை ஊதியம்‌ கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000 என்பதைத்‌ தளர்த்தி அனைத்து 'C மற்றும்‌ D' பிரிவு பணியாளர்களுக்கு 2023-24ஆம்‌ ஆண்டுக்கான மிகை ஊதியம்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்‌. Minister SS Sivasankar: சுதந்திரப்‌ போராட்ட வீரர்கள்‌, மொழிப்போர்‌ தியாகிகள்‌ இலவச பேருந்து பயணம்; அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் விளக்கம்.!

பிரதான துறைகளுக்கு 20% போனஸ்:

இலாபம்‌ ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ 'C' மற்றும்‌ 'D' பிரிவு தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின்‌ ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில்‌ கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம்‌ மற்றும்‌ 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம்‌ 20 விழுக்காடு வரை மிகை ஊதியம்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை வழங்கப்படும்‌. இதன் வாயிலாக தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌, தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்கள்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு பால்‌ உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவு இணையத்தில்‌ பணிபுரியும்‌ தகுதியுடைய 'C' மற்றும்‌ 'D' பிரிவு தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம்‌ மற்றும்‌ 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம்‌ 20 விழுக்காடு மிகை ஊதியம்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை வழங்கப்படும்‌.

10% போனஸ் வழங்கப்படும் துறைகள்:

உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ 'C" மற்றும்‌ 'D' பிரிவு தொழிலாளர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம்‌ மற்றும்‌ 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம்‌ 10 விழுக்காடு மிகைஊதியம்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை வழங்கப்படும்‌. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்‌ மற்றும்‌ சென்னை குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவு நீரகற்று வாரியத்தில்‌ பணிபுரியும்‌ தகுதியுடைய 'C' மற்றும்‌ 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம்‌ மற்றும்‌ 1.67 விழுக்காடு கருணைத்‌ தொகையும்‌ வழங்கப்படும்‌.

தற்காலிக பணியாளர்களுக்கு கருணைத்தொகை:

தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தில்‌ பணிபுரியும்‌ தகுதியுடைய 'C' மற்றும்‌ 'D' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம்‌ வழங்கப்படும்‌. இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகத்தில்‌ தற்காலிக அடிப்படையில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களுக்கு ரூ3,000/- கருணைத்‌ தொகையாக வழங்கப்படும்‌.

ரூ.16,800 வரை போனஸ் தொகை:

இதனால்‌ மிகை ஊதியம்‌ பெற தகுதியுள்ள நிரந்தரத்‌ தொழிலாளர்கள்‌ குறைந்த பட்சம்‌ ரூ.8400/- ம்‌ அதிகபட்சம்‌ ரூ.16800/- ம்‌ பெறுவர்‌. மொத்தத்தில்‌, தமிழ்நாடு அரசின்‌ பொதுத்துறை நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம்‌ ரூபாய்‌ மிகை ஊதியம்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகையாக வழங்கப்படும்‌. இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள்‌ மற்றும்‌ நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களுக்கான ஆணைகள்‌ தனியே வெளியிடப்படும்‌. இதனால் பொதுத்துறை நிறுவனங்களில்‌ பணியாற்றும்‌ தொழிலாளர்கள்‌ மிகவும்‌ ஊக்கத்துடன்‌ பணியாற்றுவதுடன்‌, எதிர்வரும்‌ விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன்‌ கொண்டாட வழிவகை செய்யும்‌.

(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).