வானிலை: இன்று 13 மாவட்டங்களில்., நாளை 11 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

மேலும், அக்.12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மிக கனமழையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tomorrow Weather (Photo Credit: LatestLY)

அக்டோபர் 09, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் நிலவிய மாற்றத்தை பொறுத்தவரையில், தமிழகத்‌தில்‌ அநேக இடங்களில்‌, உள்மாவட்டங்களில்‌, கடலோர மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில்‌ மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால்‌ பகுதியில்‌ வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரையில் கரூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருச்சி, சென்னை, சேலம், தேனி, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, விருதுநகர், சிவகங்கை, நீலகிரி, தர்மபுரி, இராமநாதபுரம், திருப்பத்தூர், தென்காசி உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 36.2 டிகிரி செல்சியசும், ஈரோட்டில் 18 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தை சுற்றுப்போட்ட வளிமண்டல சுழற்சி:

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையை பொறுத்தவரையில், லட்சத்தீவு மற்றும்‌ அதனை ஒட்டிய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்றைய வானிலை (Today Weather):

09.10.2024 அன்று தமிழகத்‌இல்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்‌சிராப்பள்ளி, கரூர்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்‌ணாமலை, கள்ளக்குறிச்‌சி, திண்டுக்கல்‌, மதுரை மற்றும்‌ தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. Tiruppur Accident: கார் - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி., 14 பேர் படுகாயம்.! 

நாளைய வானிலை (Tomorrow Weather):

10.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, நாமக்கல்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 11.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌ மற்றும்‌ சிவகங்கை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.12 முதல் கனமழை முதல் மிககனமழை எச்சரிக்கை:

12.10.2024 அன்று தமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.13 அன்று 19 மாவட்டங்களில் கனமழை:

13.10.2024 அன்று தமிழகத்தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, அரியலூர்‌ மற்றும்‌ பெரம்பலூர்‌ மாவட்டங்களிலும்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கடலூர்‌, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, தேனி, திண்டுக்கல்‌, நீலகிரி மாவட்டங்கள்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌ மாவட்டங்களின்‌ மலை பகுதிகளிலும்‌ மற்றும்‌ புதுச்சேரியிலும்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.14 & 15 தேதிகளில் மழை நிலவரம்:

14.10.2024 அன்று தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பத்தூர்‌, வேலூர்‌, இராணிப்பேட்டை, காஞ்‌சிபுரம்‌, திருவள்ளூர்‌ மற்றும்‌ விழுப்புரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 15.10.2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. பெரம்பலூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்‌சி, விழுப்புரம்‌ மற்றும்‌ புதுச்சேரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. College Student Dies: "ரூட்டு தல" விவகாரத்தில் கல்லூரி மாணவர் அடித்தே கொலை.. 5 நாட்கள் போராடி பறிபோன உயிர்.! 

சென்னை நகரில் வானிலை எப்படி (Chennai Weather Update):

சென்னை மற்றும்‌ அதன் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34” செல்‌சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26-27” செல்‌சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

09.10.2024 முதல்‌ 13.10.2024 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல், தென்மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌, தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதி, கேரள - கர்நாடக கடலோர பகுதிகள்‌, லட்சத்தீவு பகுதிகள்‌, மாலத்தீவு பகுதிகள்‌, தென்கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்‌திலும்‌ இடையிடையே 55 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.