Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)

அக்டோபர் 09, மடத்துக்குளம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில், கார் - சுற்றுலா வேன் (Car Tourist Van Crash) நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வசித்து வரும் குடும்பத்தின், கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்து வரும் உறவினரின் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு காரில் சென்றுகொண்டு இருந்தனர். Presidency College: கல்லூரி மாணவர் கொலை விவகாரம்; மாநிலக்கல்லூரிக்கு 6 நாட்கள் விடுமுறை., முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி:

இவர்களின் கார் மடத்துக்குளம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, கார் - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சிறுவன் உட்பட 4 பேர் என ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். சுற்றுலா வேனில் சுமார் 20 க்கும் அதிகமானோர் பயணம் செய்த நிலையில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜெயப்பிரியன், பிரீத்தி ஆகிய சிறார்களும், மனோன்மணி என்ற மூதாட்டியும், தியாகராஜன் என்ற இளைஞரும் விபத்தில் பலியானதாக தெரியவந்துள்ளது.

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.