MK Stalin: ரூ.40 கோடியில் பயிற்சி மையம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை ஷெனாய் நகரில் ரூ.40 கோடியில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MK Stalin | TN Assembly (Photo Credit: YouTube)

ஏப்ரல் 24, சென்னை (Chennai News): தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 24) சில முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் (CM MK Stalin) சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி பெயரில், பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியை.. மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!

பயிற்சி மையம்:

சட்டப்பேரவையில் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். இதை நாம் தக்க வைத்து, தேர்ச்சி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, சென்னை ஷெனாய் நகரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 500 மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பயிற்சி மையம் அமைக்கப்படும்.

பாராட்டு விழா:

நான் முதல்வன் திட்டத்தில் படித்து, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியினை நடத்தவுள்ளோம். வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்'. இவ்வாறு அவர் கூறினார்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement