ED Raids: சென்னையில் அதிரடி... அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை..!

தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ED (Photo Credit: @Shahzad35088757 X)

டிசம்பர் 28, சென்னை (Chennai): தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் (ED) இன்று காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கொளத்தூர் சிவ பார்வதி நகரில் அமைந்துள்ள முத்து என்பவர் வீட்டிலும், பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள பிரியா என்பவர் வீட்டிலும், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் கணேஷ் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். என்ன காரணத்திற்காக சோதனை நடத்தப்படுகிறது, சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்படுகின்றன என்பது குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  Tamil Cinema's Stalwart Vijayakanth: அஜித் முதல் ஜெயலலிதா வரை... மிரட்டிய விஜயகாந்த்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement