Gold Rate Today: வரலாறு காணாத உச்சம்.. 3 நாட்களில் ரூ.1,480 உயர்ந்து ரூ.78,000ஐ கடந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக்.!

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.78,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Silver Price (Photo Credit : @Team LatestLY)

செப்டம்பர் 03, சென்னை (Gold Price Today): தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. Gold Rate: நகைப்பிரியர்களுக்கு தித்திப்பு செய்தி.. தங்கம் சவரன் ரூ.37,000/- செம்ம வாய்ப்பு.. யூஸ் பண்ணிக்கோங்க.! 

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை :

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி கடந்த மாதம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.76,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. செப்டம்பர் 03ஆம் தேதியான இன்று செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தங்கம் கிடுகிடு உயர்வு :

நேற்று தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,725 க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.77,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. செப்டம்பர் மாதம் தொடங்கி 3 நாட்களில் மட்டும் ரூ.1,480 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை விரைவில் ரூ.80,000ஐ நெருங்க உள்ளது நகைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai) :

இந்த நிலையில் இன்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,805 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,37,000 க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சமாக ரூ.78,000ஐ கடந்தது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement