Gold Price Today (Photo Credit : Pixabay)

ஆகஸ்ட் 02, புதுடெல்லி (New Delhi): கடந்த 1900 ஆம் ஆண்டுகளில் ரூ.21 க்கு விற்பனை செய்யப்பட்ட சவரன் தங்கத்தின் விலை, தற்போது ரூ.8,000-ஐ நெருங்கி வருகிறது. 2026 ஆம் ஆண்டு அல்லது 2027 ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உயரலாம் எனவும் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் மீதான உலகளாவிய தேவை, அது கிடைக்கும் அளவு, பங்குச்சந்தை நிலவரம், உள்ளூர் விற்பனை மதிப்பு போன்றவை காரணமாக தங்கத்தின் விலை அபரீதமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். Modi-Putin Meeting: ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணம்.. கலக்கத்தில் அமெரிக்கா.! 

தொடரும் தங்க வேட்டை:

இந்தியாவில் தங்கம் என்பது தாலியில் தொடங்கி நகை ஆபரணங்கள் வரை சென்டிமென்டான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் திருமணங்கள் உட்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கும் தங்கம் முக்கியத்துவம் புரிகிறது. மொய் வைத்தது, வைத்த மொய்யை வட்டியுடன் பாரம்பரியம் என்ற பெயரில் வாங்குவது என அன்றைய தங்கத்துக்கு ஈடாக இன்றும் தங்கம் கேட்கும் வழக்கம் தொடர்கிறது. இதனால் பலரும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பிள்ளைகளுக்கு வரதட்சணை கொடுக்க முன் வரும் பெற்றோர், தங்கத்தின் விலை அதிகரித்து வருவதை கண்டு அதிர்ச்சியும் அடைகின்றனர். இவ்வாறான அதிர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், செல்வந்தர்கள் தங்களின் குழந்தைகளுக்கு 150 சவரன் முதல் 200 சவரன் வரை நகையை மணமகன் வீட்டாருக்கு கொடுத்தும் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. Neeya Naana: உசுரே போச்சு.. கதறியழுத தந்தை.. நாய்களால் மட்டுமா விபத்து? குழந்தைகளாலும் தான்.. நாய் பிரியர்களால் வெடித்த மோதல்.! 

தங்கம் வாங்குவது சுலபம்:

இந்நிலையில், குறைந்த விலையில் தங்கம் விற்பனை செய்யும் பொருட்டு, மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாம் வாங்கும் தங்கத்தின் அளவு 22, 24 காரட் ஹால்மார்க் பதிக்கப்பட்டு இருக்கும். தொடர் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு 9 காரட் தங்கத்துக்கு ஹால்மார்க் அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, 9 காரட் (9K Gold) ஹால்மார்க் தங்கம் விற்பனைக்கு வந்துள்ளது. 24 காரட் தங்கத்தை பொறுத்தவரையில் 99.9% தூய தங்கம் மற்றும் செம்பு போன்றவை கலக்கப்பட்டு இருக்கும். ஆனால், 9காரட் தங்கத்தில் 37.5% தங்கமும், 62.5% வெள்ளி மற்றும் செம்பு பொருட்களும் கலந்து இருக்கும். இதனால் 9 காரட் அளவுள்ள தங்கம் ஒரு கிராம் ரூ.3,700 க்கும், அதிகபட்சமாக 10 கிராம் ரூ.37,000 க்கும் விற்பனை செய்யப்படும். இந்த தங்கம் தற்போது உச்சம் பெற்று வரும் தங்கத்தின் விலை ஏற்றத்தை சமாளிக்க மாற்று வழியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. விரைவில் மக்களிடம் வரவேற்பை பெரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.10,000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம்.. மாதத்தின் முதல் நாளே உச்சம் தொட்ட தங்கம் விலை.. தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.! 

கவனம் தேவை:

வெள்ளியில் கொலுசு உட்பட ஆபரணங்கள் வாங்கும்போது, ஒருசில பிரதான கடையில் எடுத்த வெள்ளி ஓராண்டிலேயே அல்லது விரைவாக உடைந்துவிடுவதாக குற்றச்சாட்டு இருக்கும். இதற்கு காரணம் தரம் குறைந்த வெள்ளியில் இருந்து ஆபரணங்கள் செய்யப்படுவதால் தான். அதனால் மத்திய அரசு வெள்ளிக்கும் ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கி இருக்கிறது. 9, 22, 24 காரட் தங்கத்துக்கும் ஹால்மார்க் கட்டாயம் இடம்பெற்றதாக பார்த்து வாங்க வேண்டும். இல்லையேல் தரம் குறைந்த தங்கத்தினை விற்பனை செய்யும் வாய்ப்புகளும் அதிகம்.