Breaking: ரூ.80,000ஐ கடந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ தாண்டியது.. வார இறுதியில் வரலாறு காணாத உச்சம்.!

சென்னையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை ரூ.80,000ஐ கடந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000ஐ கடந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

Gold Silver Price (Photo Credit : @Team LatestLY)

செப்டம்பர் 06, சென்னை (Gold Price Today): தங்கம் விலை சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, கடந்தாண்டு தொடங்கி ரூ.55,000ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உயரும் தங்கம் :

தங்கம் மீதான நுகர்வு, அதன் உற்பத்தி உட்பட பல காரணங்களால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் லண்டனில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவின் பங்குச்சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கத்தின் விலை தினமும் மாற்றமடையும். அதன்படி, கடந்த மாதம் திடீரென ஆபரணத்தங்கம் ரூ.76,000ஐ கடந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்கத்திற்கு ஈடாக வெள்ளியின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 06ஆம் தேதியான இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. Coimbatore: சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு.. மக்களுக்கு ஷாக்.! 

நேற்றைய தங்கத்தின் விலை:

நேற்று 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.9,865க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் (Silver) விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,37,000 க்கு விற்பனையானது.

இன்று தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 06) 22 காரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.10,005 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.80,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று வெள்ளி (Silver) விலையை பொறுத்தவரையில், எந்தவித மாற்றமுமின்றி நேற்றைய விலையில் ஒரு கிராம் ரூ.137க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,37,000க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராம் தங்கம் ரூ.10,000ஐ கடந்தது நகைப்பிரியர்களுக்கு பேரிடியாகி இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement