Gold Silver Price: ரூ.61 ஆயிரத்தை நெருங்கி வரும் தங்கம் விலை.. வெள்ளியும் உச்சக்கட்டம்.. இன்று, தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ.!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ரூ.60ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஜனவரி 30, சென்னை (Chennai News): உலகளவில் தங்கத்தின் மீதான நுகர்வு, போர்ப்பதற்றம், தேசிய அளவில் மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக, தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி குவித்து வருகின்றனர். கடந்த சில வாரம் வரையில் ரூ.55,000 வரை இருந்த தங்கம் விலை, தற்போது ரூ.60,000-ஐ கடந்து சென்று விட்டது. YouTuber Divya Kallachi: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் அதிரடி கைது..!

சென்னையில் இன்றைய தங்கம் விலை (Today Gold Rate in Chennai):

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7ஆயிரத்து 610-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 106 ரூபாய்க்கும், கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement