Gold Silver Price: தங்கம் விலை மீண்டும் உச்சக்கட்டம்.. இன்று சவரன் ரூ.57,160 க்கு விற்பனை.!
நேற்றைவிட இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நோக்கி பயணிக்கிறது.
நவம்பர் 21, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், மத்திய கிழக்கு பதற்றம் உலகளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் நிலவி, ஒவ்வொரு நாட்டையும் நேரடியாக-மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. Dindigul Accident: லாரி - இருசக்கர வாகனம் மோதி சோகம்., 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!
விண்ணைமுட்டும் தங்கம் விலை:
இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அதன் மீதான வரி குறிக்கப்பட்டாலும், கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தங்கம், தற்போது ரூ.60 ஆயிரத்தை நெருங்கி ஏற்ற-இறக்கத்தை சந்தித்துள்ளது. தங்க நகையை வாங்க நினைப்போர் விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருக்கிறது.
இன்றைய விலை (Gold Rate Today in Chennai):
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.7,145 க்கு விற்பனை செய்யபடுகிறது. சவரன் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.57,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிலோவுக்கு ரூ.1,01,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை ரூ.1440ம், நான்கு நாட்களில் ரூ.1680ம் உயர்ந்து இருக்கிறது.