Hear Wrenching Tragedy: தென்னை மரத்தில் தேங்காய் பறித்தவருக்கு காத்திருந்த எமன்; மின்சாரம் தாக்கி பறிபோன உயிர்..!

துரட்டியுடன் கம்பி இணைக்கப்பட்டு இருந்ததால், உயர் மின்னழுத்த கம்பியின் மீது பட்டதும் மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார்.

Ambattur Electrocution Death on 04-Dec-2024 (Photo Credit: @Sriramrpckanna1 X)

டிசம்பர் 04, அம்பத்தூர் (Chennai News): சென்னையில் உள்ள அம்பத்தூர், சூரபட்டு பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 53). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது முதலாளியின் உத்தரவுக்கிணங்க, தென்னை மரத்தில் இருந்து தேங்காயை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

தேங்காய் பறிக்கச் சென்றார்:

தேங்காய் பறிக்க பயன்படுத்தப்பட்ட துரத்தி, கம்பி கொண்டு இணைக்கப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது. தென்னை மரத்திற்கு அருகேயே உயர் மின்னழுத்த கம்பியும் சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக தேங்காயை பறித்துக்கொண்டு இருந்தபோது, துரத்தி மின்கம்பியில் விழுந்துள்ளது. Tiruvannamalai Landslides: தி.மலை நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், தம்பதி உட்பட 7 பேர் மரணம் 😥.. குடும்பமே பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம் ☹️..! 

மின்சாரம் தாக்கி பலி:

இந்த சமீபத்தில் மின்சாரம் தாக்கப்பட்ட குணசேகரன், சில நொடிகள் கழித்து மதில் சுவரில் இருந்து கீழே தலைகுப்பற விழுந்தார். இதனால் அவரின் உயிர் துள்ளத்துடிக்க பறிபோனது. தலையிலும் காயம் ஏற்பட்டு, மின்சாரமும் தாக்கி இருந்ததால் மரணம் நேர்ந்தது. இந்த விஷயம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர்.

காட்சிகள் வைரல்:

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரின் உடலை சோதித்தபோது உயிர் பறிபோனது உறுதி செய்யப்பட்டது. பின் குணசேகரனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதன் பதைபதைப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெஞ்சை நடுங்கவைக்கும் காட்சிகள் உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif