Tiruvannamalai Landslide Deaths (Photo Credit: Facebook)

டிசம்பர் 03, திருவண்ணாமலை (Tiruvannamalai News): வங்கக்கடல் பகுதியில் உருவாகி, தமிழகத்தின் வடமாவட்டங்களை ஃபெஞ்சல் புயல் (Fengal Cyclone) புரட்டியெடுத்தது. குறிப்பாக திருவண்ணாமலை (Tiruvannamalai Rains), கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வரலாறு காணாத மழை-வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், தாழ்வான இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலின் மழைகொடுக்கும் மேகங்கள் ஒவ்வொரு மாவட்டத்தையும் வெள்ளத்தில் தத்தளிக்க வைத்துள்ளது.

தீப மலைப்பகுதியில் நிலச்சரிவு:

இந்நிலையில், திருவண்ணாமலை (Tiruvannamalai Landslide) மாவட்டத்தில் உள்ள தீபமலை, வஉசி மேலத் தெருவில் வசித்து வந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி மீனா. தம்பதிகளின் வீடு மலையையொட்டிய பகுதியில், மலை அடிவாரத்தில் இருக்கிறது. இதனிடையே, கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, தீப மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் பெரிய அளவிலான பாறைகளில் உருண்டு ராஜ்குமார் - மீனா தம்பதியின் வீட்டை புதைத்தது. Sathanur Dam: 52 ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்ளும் தென்பெண்ணையாறு; சாத்தனூர் அணை திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை.!

Tiruvannamalai Land Slides (Photo Credit: @dt_next / @SVijayarajan9 X)
Tiruvannamalai Land Slides (Photo Credit: @dt_next / @SVijayarajan9 X)

7 பேரின் நிலை:

இதுகுறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், தேசிய மீட்புப் படையினர், மாநில மீட்புக் குழுவினர் நிகழ்விடத்திற்கு விரைந்து 24 மணிநேரத்தை கடந்து தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வீட்டுக்கு அடியில் தம்பதியுடன் அவரின் குழந்தைகள், பக்கத்து வீட்டில் வசித்து வந்த குழந்தைகள் என 7 பேர் மண்ணுடன் புதைக்கப்பட்டனர். அவர்களை மீட்கும் பணியில், இறுதியில் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் சடலத்தையே மீட்டனர்.

சடலமாக மீட்பு:

தம்பதிகளின் குழந்தைகளுடன் விளையாட வந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் 3 குசந்தைகளும் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். அதிகாரப்பூர்வ தகவலின்படி, ராஜ்குமார் (வயது 32), மீனா (வயது 26), கௌதம் (வயது 9), இனியன் (வயது 7), மகா (வயது 12), வினோதினி (வயது 14), ரம்யா (வயது 12) ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் உடல்கள் கை-கால் என தனித்தனியாக சித்தாந்த நிலையில் மீட்கப்பட்டது. நிலச்சரிவில் சிக்கி குடும்பமே உயிரிழந்த சோகம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாது, தமிழகத்தையும் துயரில் ஆழ்த்தி இருக்கிறது.

நிலச்சரிவு சத்தம் கேட்டு, நொடிப்பொழுதில் சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.

திருவண்ணாமலை மலையின் மீது ஏற்பட்ட நிலச்சரிவு:

ராஜ்குமார் - மீனா தம்பதியின் வீடுகள் உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு: