Breaking: கட்சிக்கொடியுடன் பெண்களை இடைமறித்த கார்.. சென்னையில் பகீர் சம்பவம்.. 8 பேர் கும்பல் அதிர்ச்சி செயல்.!

குடும்பத்துடன் முட்டுக்காடு பகுதியில் இருந்த பெண்களுக்கு, காரில் வந்த மர்ம கும்பல் மிரட்டல் விடுத்து, துரத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Chennai Muttukadu Car Chase (Photo Credit: Facebook)

ஜனவரி 29, சென்னை (Chennai News): சென்னையில் (Chennai) உள்ள முட்டுக்காடு (Muttukadu) பகுதியில், சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் குடும்பத்துடன் காரில் பயணம் செய்த பெண்களை, சொகுசு காரில் வந்த இளைஞர்கள் பின்தொடர்ந்து மிரட்டி இருக்கின்றனர். காரை நடுரோட்டில் இடைமறித்த இளைஞர்கள் கும்பல், பெண்கள் பயணித்த கார் நோக்கி ஓடி வந்து மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனவரி 25 அன்று, சன்னி ஜிலாக் என்பவர் தனது குடும்பத்தினரான 3 பெண்கள், ஒரு கைக்குழந்தையுடன் முட்டுக்காடு பகுதிக்கு சென்றபோது, முட்டுக்காடு பாலம் பகுதியில் இளைஞர்கள் கும்பல் பெண்கள் பயணித்த காரை மறித்து சர்ச்சை செயலில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த விஷயம் குறித்து கானாத்தூர் காவல் (Kanathur Police) நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 12-Year-Old Girl Dies: அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி பலி? - தூத்துக்குடியில் சோகம்.! 

8 பேர் கும்பலுக்கு அதிகாரிகள் வலைவீச்சு:

புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், முட்டுக்காடு பாலத்தில் இருந்து வீடு வரை பின்தொர்ந்து கும்பல் மிரட்டி இருக்கிறது. மேலும், இவர்கள் சபாரி, தார் ஆகிய சொகுசு கார்களில் பின்தொடர்ந்துள்ளார். ஒரு காரில் கட்சிக்கொடியும் கட்டப்பட்டு இருந்தது. இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேர் யார்? என விசாரணை நடந்து வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான குற்றம் இழைப்போரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நேற்று முதல் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே, 3 பெண்களை அச்சுறுத்தும் விதமாக 8 இளைஞர்கள் செயல்பட்டது சென்னையில் நடந்துள்ளது. வீடியோ ஆதாரத்துடன் உண்மை வெளியாகி இருப்பதால், காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement