12-Year-Old Girl Dies: அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி பலி? - தூத்துக்குடியில் சோகம்.!

12 வயதுடைய சிறுமி நீரில் ஊறவைத்த அரிசிகளை தொடர்ந்து சாப்பிட்டதால், மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12-Year-Old Girl Dies: அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிட்ட சிறுமி மூச்சுத்திணறி பலி? - தூத்துக்குடியில் சோகம்.!
Deceased Malathi | Rice File Pic (Photo Credit: @PolimerNews X / Pixabay)

ஜனவரி 29, ஓட்டப்பிடாரம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் (Ottapidaram) பகுதியில் வசித்து வரும் சிறுமி மாலதி (வயது 12). இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி எப்போதும் அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிடுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனிடையே, சம்பவத்தன்று சிறுமி வீட்டில் இருந்தபோது, அதிகமாக அரிசியை ஊறவைத்து சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் வீட்டில் மூச்சுத்திணறி இருக்கிறார். இதனைக்கண்டு பயந்துபோன பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். Rowdy Killed: பட்டப்பகலில் கோவில் வளாகத்தில் பயங்கரம்; ரௌடி 6 பேர் கும்பலால் கொடூர கொலை.. ஸ்ரீரங்கத்தில் பேரதிர்ச்சி.! 

சிறுமி பரிதாப பலி:

எப்போதும் வென்றான் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறுமியை அவசர ஊர்தியில் தூத்துக்குடிக்கு அழைத்துச்செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால், சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்டமாக உறவினர்கள் கூறும்போது, சிறுமி எப்போதும் அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிடுவார் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).