Student Sexually Harassed: வீட்டு வாசலை சுத்தம் செய்த மாணவிக்கு பாலியல் தொல்லை; 21 வயது ரௌடியின் அதிர்ச்சி செயல்.!
மாலை நேரத்தில் வீட்டின் வாசலை பெருக்கிக்கொண்டு இருந்த சிறுமிக்கு ரௌடி பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஜூலை 23, ஓட்டேரி (Chennai News): சென்னையில் உள்ள ஓட்டேரி, செல்வப்பெருமாள் கோவில் தெருவில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் சிறுமி வீட்டு வாசலை சுத்தம் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சிறுமியின் கையைப்பிடித்து (Student was Sexually Harassed) இழுத்து, வாயை பொத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி அலறவே, சிறுமியின் சகோதரர் விரைந்து வந்துள்ளார். இதனைக்கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். Surya 44: வாயில் சிகிரெட்டுடன் கெத்தாக லுக் விட்ட சூர்யா; சூர்யா 44 படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!
21 வயதில் சரித்திர பதிவேடு குற்றவாளி:
இந்த விஷயம் தொடர்பாக சிறுமி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஓட்டேரி சந்தியப்பன் மூன்றாவது தெரு பகுதியில் வசித்துவரும் வசந்தகுமார் (21) என்பவர் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. வசந்தகுமாரின் மீது ஏற்கனவே 4 குற்றவழக்குகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில், அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் இருந்துள்ளார். இதனால் உள்ளூரில் ரௌடியாக இருந்த வசந்தகுமார், சம்பவத்தன்று மாணவியிடம் அத்துமீற முயன்றதும் அம்பலமானது. இதனையடுத்து, வசந்தகுமாரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.