Watch Video: அஇஅதிமுக பிரமுகரை துடைப்பத்தால் நொறுக்கிய பெண்கள்.. பாலியல் தொல்லை கொடுத்ததால் சம்பவம்.!
வாடகைக்கு வீட்டில் குடியிருந்த இளம்பெண்களுக்கு, வீட்டை காலி செய்த பின்னரும் போனில் தொடர்புகொண்டு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்கட்சி பிரமுகரை, இளம்பெண்கள் குழு வீட்டிற்கு வரவழைத்து விளக்குமாறு அடி கொடுத்து பாடம் எடுத்த சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது.
ஜனவரி 30, படைப்பை (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம், மணிமங்கலம், படைப்பை (Padappai) பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம். இவர் அஇஅதிமுக கட்சியில் (AIADMK Supporter), எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், இளம்பெண்கள் வாடகைக்கு தங்கி இருந்துள்ளனர். இவர்கள் ஸ்ரீபெரும்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. 3 மாதமாக பூட்டிக்கிடந்த வீட்டில் தந்தை-மகள் சடலம்.. இன்ஸ்டாகிராம் நண்பரின் அதிர்ச்சி செயல்.. சென்னையில் பரபரப்பு.!
பாலியல் தொல்லை:
இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் பெண்கள் வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். பொன்னம்பலம் தனது வீட்டில் வாடகைக்கு குடிவந்த பெண்களிடம் பாலியல் சீண்டல் கொடுப்பது என இருந்து வந்துள்ளார். இதனால் அதே பகுதியில் வேறொரு வீடு பார்த்து பெண்கள் சென்றுள்ளனர். இருப்பினும், பொன்னம்பலம் பெண்களை தொடர்ந்து அச்சுறுத்தி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
அதிமுக பிரமுகருக்கு விளக்குமாறு அடி:
பெண்களை நேரில் பார்க்கும்போதும், போனிலும் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த பெண்கள் பொன்னம்பலத்தை நேரில் வரவழைத்து, வீட்டுக்குள் வந்ததும் அவரை துடைப்பத்தால் அடித்து நொறுக்கினர். பின் காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு வீடியோ ஆதாரத்துடன் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பொன்னம்பலத்தை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் வெளிமாநிலம், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தொடர்ந்து அத்துமீறல் செயலில் ஈடுபட்ட நபரை, பெண்கள் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், கட்சியின் நலனுக்கு எதிராக செயல்பட்ட பொன்னம்பலத்தை, அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
அதிமுக பிரமுகரை வெளுத்தெடுத்த பெண்கள்: