Breaking: 3 மாதமாக பூட்டிக்கிடந்த வீட்டில் தந்தை-மகள் சடலம்.. இன்ஸ்டாகிராம் நண்பரின் அதிர்ச்சி செயல்.. சென்னையில் பரபரப்பு.!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் தந்தை - மகளின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

Breaking: 3 மாதமாக பூட்டிக்கிடந்த வீட்டில் தந்தை-மகள் சடலம்.. இன்ஸ்டாகிராம் நண்பரின் அதிர்ச்சி செயல்.. சென்னையில் பரபரப்பு.!
Thirumullaivoyal | Death File Pic (Photo Credit: @PuthiyaThalaimurai X / Pixabay)

ஜனவரி 30, திருமுல்லைவாயல் (Chennai News): காஞ்சிபுரம் (Kanchipuram) மாவட்டத்தில் உள்ள பேரிக்கை பகுதியில் வசித்து வருபவர் சாமுவேல் எபினேசர் (வயது 34). இவர் மருத்துவராக இருந்து வருகிறார். கடந்த பிப்ரவரி 2024-ல் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள விஜிஎன் அடுக்குமாடி குடியிருப்பில் அறையெடுத்து தங்கி இருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக கணவரை பிரிந்த எழில் சிந்தியா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர் கணவரை பிரிந்து தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். எழில் சிந்தியாவின் தந்தை சாமுவேல் சிறுநீரக நோயாளி ஆவார்.

இன்ஸ்ட்டா நட்பு சண்டை:

இதனால் தந்தையை அவ்வப்போது சென்னைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து சென்றுள்ளார். சென்னை வந்து செல்ல சிரமமாக இருந்த காரணத்தால், அதனை நண்பரான சாமுவேல் எபினேசரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, எபனேசர் தந்தை - மகளுக்கு வாடகைக்கு அறையெடுத்து தங்க வைத்துள்ளார். இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் சாமுவேல் உடல்நலக்குறைவால் உயிரிழக்கவே, தந்தையின் உடலை சொந்த ஊர் எடுத்துச்செல்ல முடிவெடுத்த எழில் சிந்தியாவுக்கும் - மருத்துவர் சாமுவேலுக்கும் இடையே தகராறு உண்டாகியுள்ளது. Boxer Killed: சென்னையில் பயங்கரம்.. 24 வயது இளம் பாக்ஸர் 9 பேர் கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை..! 

கணவரை பிரிந்த பெண் கொலை:

இந்த தகராறில் ஆத்திரமடைந்த எபனேசர், சிந்தியா தாக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தில் சிந்தியா உயிரிழந்துவிடவே, இரண்டு சடலத்தையும் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த மருத்துவர், ஏசியை ஆன் செய்த்துவிட்டு, சில வேதிப்பொருட்களை தூவி சென்றுள்ளார். செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை என 4 மாதங்களாக வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. இந்த விஷயம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தற்போது தகவல் தெரிவித்தனர். மேலும், சாமுவேல், எழில் சிந்தியா ஆகிய தந்தை - மகள் மாயமானதாகவும் உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறை விசாரணை:

புகாரை ஏற்ற காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சாமுவேலின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. வீட்டின் பூட்டை உடைத்து சடலம் மீட்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்திற்கு தப்பிச் சென்ற மருத்துவர் எபனேசர் கைது செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்பட்ட நட்பு தகாத உறவாக மாறியதால் நேர்ந்த விபரீதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).