Dindigul Accident: லாரி - இருசக்கர வாகனம் மோதி சோகம்., 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!
மூவராக விதியை மீறி இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நிலையில், டூவீலர் மீது லாரி மோதியதால் 3 நபர்களும் உயிரிழந்த சோகம் செம்பட்டி அருகே நடந்துள்ளது.
நவம்பர் 21, செம்பட்டி (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி வனச்சரகத்தில், வனக் காப்பாளாராக வேலை பார்த்து வருபவர் ராமசாமி. இவரின் உறவினர் அரவிந்த் பாண்டி (வயது 19). இவர் ராமசாமியின் வீட்டில் தங்கியிருந்து, ஒட்டன்சத்திரம் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் முதல் ஆண்டு பயின்று வந்துள்ளார். இதே கல்லூரியில் சித்தரேவு பகுதியில் வசித்து வரும் அருண்பாண்டி (வயது 16) என்பவரும் பயின்று வந்துள்ளார். அரவிந்த், அருண் நண்பர்கள் ஆவார்கள். Dy CM Udhayanidhi Stalin: அயலக மண்ணில் வென்று வெள்ளிப்பதக்கத்துடன் தாயகம் திரும்பிய வீரர்., துணை முதல்வர் பாராட்டு.!
மூவரும் பரிதாப பலி:
இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் ராமசாமி, அரவிந்த் பாண்டி மற்றும் அருண் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சித்தரேவு நோக்கி பயணம் செய்தார். அச்சமயம், தேனியில் இருந்து செம்பட்டி நோக்கி லாரி ஒன்று பயணம் செய்தது. இந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவர்கள், தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தனர்.
காவல்துறை விசாரணை:
மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர்களின் மரணம் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பட்டி காவல்துறையினர், உயிரிழந்த மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.