ஏப்ரல் 08, அம்பத்தூர் (Chennai News): சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 25). இவர், ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார். தினமும் பணிக்காக இரு சக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 07) காலை பணிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அம்பத்தூர் அருகே திடீரென பிரேக் பிடித்த போது நிலை தடுமாறி சறுக்கி விழுந்தார். TN Governor RN Ravi: தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்ட ஆளுநர்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
ஐடி பெண் பலி:
இதில், பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.